காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-22
கந்தநம !
ஐந்து முகர் தந்த முருகேசநம !
கங்கை உமை தன் மைந்த நம!
பன்னிரு புயத்த நம!
நீப மலர் மாலை புனையும் தந்தை நம!
ஆறுமுக ஆதி நம! சோதி நம!
தற்பரமதாம் எந்தை நம !
என்றும் இளையோய் நம குமார நம!
-கந்தபுராணம்
முருகப்பெருமான் தம் பிள்ளை பருவத்தில் அற்புதமான திருவிளையாடல்கள் புரிந்தார் .சில நேரம் மேரு மலைக்கு தாவி,சிகரத்தை பெயர்த்து கயிலை மலை மீது எறிவார், சில நேரம் வாத்தியம் இசைப்பார் பலதிக்குகளில் உள்ள பர்வதங்களை பாம்புகளால் கட்டி இழுப்பார் , இப்படியாய் அவர் புரிந்த லீலைகளை கண்டு இந்திராதி தேவர்கள் அச்சம் கொள்ள
அனைவரும் ,அசுர குழந்தையோ என ஐயம் கொண்டு பாலகனுடன் சமர் புரிய அவரை துவம்சம் செய்தார் வேலவர் ,தேவகுரு வேண்டி நிற்க தேவர் பிழை பொறுத்து அருள் புரிய சமரில் வீழ்ந்தவர் உணர்வு பெற்றனர் அவர் தம் பிழை உணர்ந்து ஆறு முகக்கடவுளை எண்ணி வணங்கி நின்றனர்.அவருக்கு விஸ்வரூபம் காட்டி பாலகன் அல்லன் இவன் பரமேஸ்வரனே என
உணரவைத்தார்.அதுவே இந்த துதி பாடல் .
வெற்றிவேல் வீரவேல் என கோசம் கொண்டு சூரனை கொன்ற வெற்றி வேல் முருகனை போற்றி புகழ்ந்திருப்போம் அதில் அரோகரா என்பது
அர ஹரோ ஹராஎன்பது ஆகும் திருஞனசம்பந்தரால் சைவர்களுக்கு அருளப்பட்ட இந்தவார்த்தைக்கு இறைவனே, துன்பங்களை நீக்கி
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள் நாளடைவில் இது கந்தவேலின் அடியார்க்கு மட்டுமே உரித்தானது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றால் ,வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' என்பதே பொருள்.
கந்தன் படை காவடி தூக்கிவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று அம்மை நகர் ஆடி வர அங்கிருந்த மாந்தரெல்லாம் காவடி தோள் சுமந்து நிக்கும் பக்தர்களை பக்தியுடன் வணங்கி நின்றனர் .முருகன் அடியார் பலர் அருள் நோக்குடன் ஆடிவர அடியார் சேவை ஆண்டவருக்கு செய்யும் சேவை என தாகத்திற்கு நீர் தந்து ,பாதத்தில் நீர் உற்றி குளிர்வித்து விழுந்து வணங்கி திருநீரை பிரசாதமாய் பெற்று பரவசித்து இருந்தனர்
சொந்த பந்தம் கூடி வர குவிந்திருந்த பக்திக் கூட்டம் கந்தா என்று கசிந்துருகி கருப்பன் குடிகொண்ட அரசமரம் நோக்கி வந்தது.அரசன் வீற்றிருக்கும் அம்மரம் அரசமரம் ஆனது.யாமிருக்க பயமேன் என நவிலும் நற்றமிழ் கடவுளும், நானே உன்னுடன் இருக்கிறேன் என்று நமை நடத்தி வைக்கும் கருப்பனும் கடை கண் நோக்கி இருக்க கவலை ஏன் கண்மணிகளே! கலங்காதீர்கள் பார்த்திபனூர் குடிகொண்ட கருப்பனும்,குறிச்சி திட்டில் குடியிருக்கும் மாவடிகருப்பும் சுப்பன் குலம் காக்க காவலாய் நீவீர் குடி கொண்ட குச்சில் எல்லாம் தண்டம் தாங்கி நிற்கின்றனர். வலிந்து வந்து உம்மை தாக்க வரும் பகைகளை எல்லாம் வலுவிழக்க செய்து வினை பயன் தன் கடமை முடிக்க நியதிப் படி சிறிது இடம் தந்து அதையும் தாங்கும் வலிமை தந்து துணை நிற்கின்றனர்.போதாத காலம் வரும் போதும் பொறுமையின்றி நாம் தவிக்கும் போதும் புடம் போடும் தங்கம் தககக்கும் எனும் சொல்லுகினங்க நம்மை சுத்திகரித்து நம் நோய்க்கு மருந்தாய், நோகும் இதயத்திற்கு மயிலிறகாய் நம்பிக்கை வித்தாய் , தாயாய் நின்று காக்கின்றனர்.
அரண் வாழும் அந்த அரசமரம் பசுமையாய் வசந்தகாலம் வந்தது நம் வாழ்வில் எனும் கட்டியம் கூறும் கட்டியக்காரனாய் கிளைகள் பரப்பி தழைகள் நிரப்பி குளிர்ந்திருந்தது. அங்கே ஆவாகனம் ஆனது அத்தனை கருப்பும். கந்தன் காவடியில் கருப்பின் கலப்பு, களிப்பு மிகுந்த ஆனந்த அணிவகுப்பு. ஆதி கருப்பு, இளையகருப்பு, ஆவேசக்கருப்பு, மாவடிகருப்பு,பிள்ளத்தி கருப்பு, என வகை வகையாய் வீறுகொண்டு விழி உயர்த்தி, ஆவேசக்குரல் உயர்த்தி ,அங்கம் அதிர அருள் வாக்கு தந்து ஆங்காரம் குடி கொண்டு அகங்காரம் அகற்றி,ஆழ்ந்து அகன்று நுனி குறுகிய வேல் போல் விழி தீட்சனியத்தால் பற்றவந்த பகை கடிந்து பரவசமாய் முன்னேறியது.
அம்மைநகர் பெற்றுவந்த வரமாய் நம் பாட்டன் சுப்பன் அவர் வம்சம் வந்த சண்முகத்தின் பெயரனாய் வம்சம் சுமந்த கருப்பனையும் ,கருப்பனை சுமந்த சுப்பனையும் ஒரு சேர சுமந்த பார்த்திபன். அன்று அவன் மேனி குடி கொண்ட கருப்பனின் கருணையை சொல்ல மொழியும் பயன் தரா. நமது முன் தலைமுறை தம் தாத்தாவை முருகா தாத்தாவாக பார்த்திருக்கும் அவர்கள் கருப்பனை சுமந்ததையும் அறிந்திருக்கும் ஆனால் அன்றொரு நாள் ஊ ர்விளையாடிய சண்ட மாருதம் போல் கணை பொலிந்து வினை அகற்றும் கந்தன் கை வேலாய் நின்று சுற்றம் காத்த கருப்பனை தன் அங்கம் தாங்கிய எங்கள் பாட்டனாரை காண பேரு கிடைக்க பேரப் பிள்ளைகளுக்காய் நம் பாட்டன் சுப்பனாக அன்று அவதரித்தது இந்த பார்த்தன் தான்.தர்மம் தழைக்க நடந்த மாபாரதப் போரில் முக்கிய பங்கு அன்று அந்த பார்த்தன் கொண்டான் ,இன்று சுப்பன் வம்சம் இடையறா வந்த இன்னல்களை தாண்டி,இதுகாறும் வந்த இருள்நிலையை பக்தி எனும் படகில் ஏறி காவடி எனும் துடுப்பை போட்டு வாழ்வில் ஒளி மயம் காண விளையும் பொழுதில் உறுதுணையாய் தம் தேகம் வருத்தி பாட்டனை வருவித்து அருள் வாக்கினை தந்து முழுமையாய் தன்னை
ஒப்புவித்தான் அருமை தம்பி பார்த்திபன்.
கருப்பன் சந்தியில் களிப்படைந்த காவடிக் கூட்டம் அவ்விடம் விட்டு ஆனந்தமாய் அடுத்தக் கட்டம். இதுவரை இருந்த நான் என்பது வேறு, இவ்விடம் முதல் என்னுடன் வந்த நான் என்பது வேறு. கொடுமுடி தீர்த்தம் மங்கையரின் சிரத்தினில் மாறி,மாறி பயணித்திருக்க,இந்த ஒரு கட்டத்தில் எனக்கு அதை சுமக்கும் பேரு.அன்று நான் சுமந்ததின் பயனே இன்று என்னால் இவ்விதம் ஓராண்டு கடந்தும் இம்மியளவும் குறையாமல் நிறைந்த பக்தி சுவை பரிமாறும் பாக்கியமும் தந்தது. தன்னிலை மறந்து தானே கூத்தாடிதானுமிருக்க,
தனக்கு மேலே மற்றொன்றும் ஆதிக்கம் செலுத்த சுய கட்டுப்பாட்டை மீறிய உணர்வு நிலை.அறிவியல் ஆயிரம் சொல்லட்டும், ஆத்ம சிந்தனை,தன்னை அறிதல் என எவ்விதமாய் பெயர் கொடுத்து இதனை விரித்துரைக்கட்டும்.
ஆயினும் குறை ஒன்றும் இல்லை இந்த உணர்வு நிலை தரும் நம்பிக்கை விதை போதும் ,சிக்கன பிடித்து சிங்காரவேலர் பதம் பற்றுவோம்.