காவடி சில நினைவுகளும் பகிர்வுகளும்-13
குறிச்சியில் இருந்து பரமக்குடி மார்க்கமாய் பார்த்திபனூர் வந்தடைந்தோம்.இங்கு எங்களுக்கு கருப்பனும்,அவர் சோதரி அங்காளஈஸ்வரியும் உச்சிகால பூஜையில் அருள் பாலிக்க திருஉள்ளம் கொண்டிருந்தனர்.ஆம் சுட்டெரிக்கும் சூரியனாய் பகலவன்,பகல் பொழுதின் உச்சத்தில் உயர்ந்திருக்க,நம் வாழ்வின் இருள் நீக்கி ஒளிமயமான வாழ்வளிக்கும் பார்த்திபனூர் கருப்பன் அருள் மிக்க கம்பீரத்துடன் வெட்டருவாள் தாங்கி,பகை விரட்டும் வாள்களே முறுக்கிய மீசையாய் ஆனது போன்றும் ,பகலவனே பாங்காய் இவர் கண்களே ஆனதுபோன்ற பார்வையும்.எதற்கும் அஞ்சாதே நான் உண்டு உனக்கு என சொல்லும் ஆகிருதியும் கொண்டு சுப்பன் அவன் குலதெய்வம் வீற்றிருந்தது தன் சந்ததிகளுக்கு அருள்பாலிக்க.
வீராவேசமாய் வெட்ட வெளியில் கருப்பன் காவல் இருக்க,நட்ட நடு மண்டபத்தில் ஈசன் நாயகி,ஈரேழு உலகின் தாயாகி,கருணையே உருவமாய்,கதிர் பச்சை பட்டுடுத்தி,சூழ வரும் பகை விரட்டி புதல்வர்களை காத்திட கரத்தில் சூலம் ஏந்தி,மங்கையர் குலம் போற்றும் குங்குமம் தாங்கி முத்து ரத்திணமாம் எங்கள் பாட்டியம்மாள் வழிபட்ட அங்காளஈஸ்வரி அருள் ததும்பும் முகத்துடன்,தன் மைந்தர்கள் முன்னவன் ஆனைமுகன் ஒருபுறமும்,பின்னவன் ஆறுமுகன் ஒருபுறமும் வீற்றிருக்க
நடுவே குளிர்ந்த முகத்துடனே கொளுவீற்றிருந்தால்.
பார்த்திபனூர் ஊரின் மையத்தில் இக்கோவில்,இயற்க்கை சூழ் வயல் நடுவே மாவடி கருப்பனை வழிப்பட்ட நாங்கள், மருகும் எண்ணங்களை கொண்ட மனிதர்களின்
நடுவிருந்து, அவர்களை காக்கும் கருப்பனை காணவந்தோம்.
கோவில்,பக்திமணம் கமல,எங்கள் மனம் குளிர தன் சந்ததியை வரவேற்க தயாராய் இருந்தது.வாங்கி வந்த பூமாலை சாற்றி,பாமாலை பாடி,ஊதுபத்தி ஏற்றி,ஒளிரும் ஆலம் சுற்றி அம்மை தனை வணங்கினோம்.
கருப்பன் சன்னதியை நாடி அவன் பாதம் வணங்க முன்னேறினோம்.உச்சிவெயில் பொழுது,சுற்றித்தது சூரியன்,சூடு காட்டியது நிலம்.....அதெற்கெல்லாம் மேல் ஆவேசம் காட்டியது கருப்பு.சூடு தாளாத எங்கள் பாதங்கள் நிழல் கொட்டகையை நாட,அதுவும் கருப்பனை புறம் இருந்து வணங்கும் முறையானது.உக்கரம் கொண்ட சக்கந்தி பிள்ளத்தி கருப்பை அவ்விதம் வணங்கினோம் ,அதேபோல் அன்றைய ஆவேசம் கொண்ட பார்த்திபனூர் கருப்பையும் அவ்விதமே வணங்கும் வகை அமைந்தது.
ஆனால் கருப்பை தாங்கும் வம்சத்தினர் அவன் முன்னே சுடும் நிலத்தையும் நினையாமல்,அவன் முன்னே மண்டியிட, நம் பாட்டன் வந்து,பாட்டன் மேல் கருப்பன் வர....வெட்டருவாள் தோளில் தாங்கி,தீவினை பயனை முடிக்கும் வீராவேச பெருமானாய் ஒருபுறம் உயர்ந்திருக்க!
தன் தனையனுக்காக இரட்டை கங்கணம் கட்டிய மூர்த்தி சித்தப்பா,அதில் ஒன்றை தன் மகனிடம் சமர்ப்பிக்கும் தக்க தருணம் இதுவே என ஒன்றினை கழட்டி உயர பறந்து ஊர் தேடி விரைந்து வந்த சண்முகத்தின் பெயரனும்,அதே சண்முகத்தின் அப்பனும் ஆன பார்திபனூரானை தன பெயரில் பதித்து வைத்திருக்கும் பிரசன்னாவிற்கு மற்றொரு கருப்பு கட்டிவிட.
ஏற்கெனவே நிமிர்ந்து நின்ற கருப்பின் கையால் காவடிக்கு என்று விசேசமாய் வடிவம் கொண்ட கரும் கச்சை அவன் இடுப்பில் கட்டப்பட அங்கே வந்திறங்கியது ஆவேச கருப்பு.
பிரசன்னாவின் மேனியில் ஏறியது கச்சை மட்டும் அன்று.அதுவரை அடக்கமான பிள்ளையாய்,அடியாருக்கு சேவகம் செய்யும் சிறு தொண்டன் போலிருந்த இந்த நெடியவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஆவேசம் என்று அரட்டிவிட்டான் அனைவரையும். குரலில் இருந்த உணர்ச்சியும்,உடலில் இருந்த முறுக்கும்,வானம் பிளக்கும் குரல் ஒலியுமாக,நெடிந்துயர்ந்து நின்று சபதம் செய்திட்டான் கருப்பனாக.
தம் வம்சத்தில் இருக்கும் அத்தனை குறைகளையும் களைந்து மகிழ்ச்சி நிலவ வகை செய்வேன் என்று அனைவருக்கும் வரப்பிரசாதம் தந்திட்டான்.
நடக்க இருக்கும் காவடியில் சுப்பன் குடும்பம் எடுக்கும் அத்தனை காவடியையும் முருகன் சன்னதி வரை குறைவின்றி எடுத்து செல்லும் அருளையும் புரிந்திட்டான்.நமை காக்கும் குலதெய்வத்தின் முழு வடிவும் அன்று அங்கிருந்த அனைவருக்கும் உணர்த்த்திட்டான்.நாம் எடுக்கும் முயற்சிக்கு இதைவிட நல்ல ஆசி என்னவாக இருக்க முடியும்.அதனால் உக்கிரமான பொழுதையும்,குளிர்விக்க கருப்பன் உண்டு என்ற நம்பிக்கையுடன் மனம் முழுதும் குளிர்ந்த ஆசுவாசம் பெற்று பசலைக்கு புறப்பட்டோம்.
காவடிக்கு முன்பு குல தெய்வங்களை வழிபட்டு வந்த விவரங்களை இங்கே பகிர்ந்து கொண்டு இருந்தோம்.மே மாதம் 23 ஆம் தேதி ,சக்கந்தி,குறிச்சி இந்த தலங்களை வழிப்பட்ட பின்னே,உச்சிகால பூஜைக்கு நாங்கள் பார்த்திபனூர் சென்றடைந்தோம்.